“அல்லாஹ்வின் அருட்கொடை” அல் மிஸ்க் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டலத்தின் ஐகாட் அல் மிஸ்க் கிளை சார்பாக வாராந்திர சொற்பொழிவு 29.03.2012 அன்று அல் மிஸ்க் கிளையில் நடைபெற்றது. இதில் சகோ.ஜாஹிர் ஹுஸைன் அவர்கள் “அல்லாஹ்வின் அருட்கொடை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

இந்த அமர்வின் இறுதியில் கலந்துக் கொண்ட சகோதரர்களிடம் மார்க்க கேள்விகள் கேட்கப்பட்டு சரியான பதிலினை சொன்ன சகோதரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

“அல்லாஹ்வின் அருட்கொடை” அல்கர்ஜ் சஹானா கிளை உள்ளரங்கு நிகழ்ச்சி

ரியாதின் புறநகர் கிளையான அல்கர்ஜ் சஹானாவில் மார்க்க விளக்க உள்ளரங்கு நிகழ்ச்சி கடந்த 11.11.2011 வெள்ளியன்று ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு சஹானா பகுதியில் நடைபெற்றது. “அல்லாஹ்வின் அருட்கொடை” என்ற தலைப்பில் மண்டல பேச்சாளர் சகோ. அன்சாரி உரையாற்றினார். மாநில மண்டலச் செய்திகளை சமுதாயப்பணி ஒருங்கிணைப்பாளர் சகோ.அமீர்தீன் எடுத்துரைத்தார். கிளைத் தலைவர் சகோ. வழுத்தூர் அன்சாரி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஆர்வத்துடன் சகோதரர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.