அல்ஐய்ன் TNTJ நடத்திவரும் வட்டியில்லா கடனுதவி திட்டம்! கடந்த 3 ஆண்டில் சுமார் 50 லட்சம் ரூபாய் கடனுதவி!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் எனும் பேரியக்கம் தமிழகத்திலே மக்கள் பேராதரவுடன் பல சமுதாயபனிகளை சிறப்புடன் செய்து வருகின்றது.

அதனடிப்படையில் அதன் வழிமுறையை பின்பற்றி அதில் அங்கம் வகிக்கக்கூடிய அதன் உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் தங்களால் இயன்ற சமுதாய நலப்பணிகளை அவ்வப்போது செய்து வருகின்றார்கள் அதிலும் குறிப்பாக இந்த சமுதாயத்தில் புரையோடிப்போயுள்ள வட்டி எனும் வன்கொடுமையிலிருந்து இந்த சமுதாயம் விழிப்புணர்வு ஏற்பட்டு விடுபட வேண்டும் என்ற நன்னோக்கத்தில் அல்லாஹ்வின் மாபெரும் உதவியுடன் தொடர்ந்து கடந்த ஆறு வருடங்களாய் அல்லாஹ்விற்காக அழகிய கடன் எனும் வட்டியில்லா கடன் மற்றும் சேமிப்பு திட்டத்தினை அல் அய்ன் தவ்ஹீத் ஜமாஅத்தில் நிர்வாக பொறுப்பில் அங்கம் வகிக்ககூடிய சகோதரர்கள இத் திட்டத்தினை நிர்வகித்து வருகின்றார்கள்

இத் திட்டத்தின் கடந்த மூன்று வருடங்களுக்கான செயல் திட்டத்தை அதன் உறுப்பினர்களிடம் அறிவித்து அவர்களின் சேமிப்பு தொகையினை உரியவர்களிடம் 01-01-2010 அன்று ஒப்படைக்கப்பட்டது.

2007 – 2009 ஆகிய கடந்த மூன்று வருடத்திற்கான செயல் திட்டங்கள்

• இத்திட்டத்தின் மூலம் பயன்பெற்ற மொத்த உறுப்பிணர்கள் 220 நபர்கள்
• உறுப்பினர்களுக்கு கடனாய் கொடுத்த மொத்த தொகை திர்ஹம் 5,95.800.00
• உறுப்பினரல்லாதவர்கள் , உறுப்பினர்களின் உதவியுடன் பயனடைந்தனர் .
• மொத்த கடன் தொகை இந்திய ரூபாய்க்கு நிகரான தொகை 47,66.400.00 இந்திய ரூபாய் .
• சேமிப்பு தொகையாக உறுப்பினர் ஒருவர் திரும்ப பெற்றது ரூபாய் 3,600.00 திரஹம்ஸ்.

அல்லாஹ்வின் மாபெரும் அருளால் இத்திட்டத்தின் மூலமாக வட்டி எனும் வன்கொடுமையில் இருந்து பல சகோதரர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

இத்திட்டத்தில் உறுப்பினரல்லாத பல சகோதரர்களுக்கும் அவர்கள் வட்டியில் வீழாமல் தடுப்பதற்க்காக ஏராளமான கடன் உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சமுதாயத்திற்க்கு மிகவும் அவசியமான இத்திட்டத்தினை வளைகுடா மற்றும் தாயகத்தில் உள்ள நம் சகோதரர்களும் துவக்கி வட்டியில்லா சமுதாயமாக நம் சமுதாயத்தினை மாற்ற ஒவ்வொரு கொள்கை சகோதரனும் முன் வர வேண்டும் .