கடந்த 12.02.2010 வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அமீரகம் தழுவிய அனைத்து மண்டல நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் அல்அய்ன் மண்டலத்தின் சார்பாக அல்அய்ன் கார்டன் ஹோட்டலில் நடைபெற்றது.
முதலில் தவ்ஹீத் ஜமாஅத் அல்அய்ன் மண்டல தலைவர் ஆறாம்பன்னை முஹம்மதுசலீம் அவர்கள் வந்திருந்த அனைத்து மண்டல நிர்வாகிகளையும் வரவேற்று வரவேற்புரை நிகழ்த்தினார். அதனை தொடாந்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அமீரக ஒருங்கினைப்பாளர் ஹாமின்இபுராஹீம் அவர்கள் தலைமையில் அனைத்து மண்டல நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது.
நிர்வாகிகளின் அறிமுகத்திற்கு பிறகு இன்ஷாஅல்லாஹ் சென்னையில் நடைபெறவிருக்கும் கோரிக்கைமாநாடு மற்றும் பேரணி பற்றிய ஆலோசனை தொடங்கியது. அதில் கடந்த காலங்களில் கும்பகோணம் மற்றும் வல்லத்தில் நடைபெற்ற மாநாடு மற்றும் பேரணிகள் பற்றி விவாதிக்கப்பட்டு அந்த மாநாடு மற்றும் பேரணிகளில் ஏற்பட்ட நிறைகுறைகள் சுட்டிக்காட்டப்பட்டது இன்ஷாஅல்லாஹ் நடக்கவிருக்கும் கோரிக்கை பேரணி மாநாட்டில் இத்தகைய குறைபாடுகள் நடந்துவிடாமலிருக்க தலைமைக்கு கோரிக்கை விடுப்பது என தீர்மானிக்கப்பட்டது.
மேலும் வெளிநாடு வாழ் சகோதரர்கள் தங்களின் வெளி நாட்டு வாழ்க்கையை முடித்துக்கொண்டு தாயகம் சென்ற பின்னர் என்ன செய்வது எப்படி வாழ்க்கையை ஓட்டுவது என்ற வழிதெறியாமல் தவிப்பவர்களுக்கு இந்திய அரசு சில நல திட்டங்களை அறிவித்து செயலாற்றி வருகின்றது இது பற்றிய விழிப்புணர்வை நம்முடைய முஸ்லீம் சகோதரர்கள் மத்தியில் ஏற்படுத்தி அவர்கள் தன் சொந்த நாட்டிற்கு திரும்பியவுடன் அங்கு நிரந்தரமாக தங்கி தங்களின் வாழ்க்கையை நடத்தி செல்வதற்கு அரசின் நல திட்டங்கள் என்ன? இதை எப்படி பெறுவது என்பன போன்ற ஆலோசனை மற்றும் பயிற்சி வகுப்புகளை ஜமாஅத் சார்பாக நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
இறுதியாக அல்அய்ன் மண்டல நிர்வாககுழு உறுப்பினர் முஹம்மதுரயீஸ் அவர்களின் நன்றியுரையுடன் அனைத்து மண்டல ஆலோசனை கூட்டம் நிறைவடைந்தது மண்டல கூட்டத்திற்கான ஏற்பாட்டினை அல்அய்ன் மண்டல நிர்வாகிகள் மிகசிறப்பாக செய்திருந்தனர்.