அறிவியல், பொறியியல் மாணவர்களுக்கு இலவச புத்தகம்

free_bookஜூன் 9: ராஜஸ்தான் புத்தக வங்கியில் கலை, அறிவியல், பொறியியல் போன்ற படிப்புகளுக்கு இலவசமாக புத்தகங்களைப் பெறுவதற்கு ஜூன் 12-ம் தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.

இது தொடர்பாக அந்த புத்தக வங்கி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: புத்தக வங்கி சார்பில், கலை, அறிவியல் படிப்புகள், பொறியியலில் எலக்ட்ரிகல்ஸ் அண்டு எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன் இன்ஜினியரிங், கம்ப்யூட்டர் சயின்ஸ், தகவல் தொழில்நுட்பம் ஆகிய படிப்புகளுக்கும் இலவசமாக புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

புத்தகங்களைப் பெறுவதற்கான விண்ணப்பங்கள் ஜூன் 12-ம் தேதி முதல் வழங்கப்படும். விண்ணப்பங்களை “ராஜஸ்தான் இளைஞர்கள் சங்கம், எண் 4, ஜோதி வெங்கடாசலம் தெரு, அட்கின்சன் பேலஸ், வேப்பேரி (போக்குவரத்து ஆணையர் அலுவலகம் பின்புறம்), சென்னை -07′ என்ற முகவரியில் மாலை 3 மணி முதல் 5 மணி வரை பெற்றுக் கொள்ளலாம்.

விண்ணப்பம் வாங்க வரும்போது கல்லூரி கட்டணம் செலுத்தியதற்கான அசல் ரசீது, அடையாள அட்டை ஆகியவற்றைக் கொண்டு வர வேண்டும். விண்ணப்பங்கள் இலவசமாக வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கான அந்நிறுவனத்தின் தொலைபேசி எண்:

044-2561 0369/0978.

-தினமணி