தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தவ்ஹீத் பள்ளியில் மே மாதம்1 முதல் மாணவ மாணவிகளுக்கான கோடைக்கால பயிற்சி வகுப்பு துவங்கி நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு, இஸ்லாமிய கொள்கை விளக்கம், நடைமுறை ஒழுங்குகள், தொழுகைப் பயிற்சி , நபிகள் நாயகம் அவர்களின் வரலாறு போன்றவை கற்பிக்கப்பட்டது.
இந்த வகுப்பை இப்பள்ளி இமாம் முகம்மது அலி அவர்கள் நடத்தினர்.
இதை கிளை நிர்வாகிகள் சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்தனர்.அல்ஹம்துல்லில்லாஹ் இறுதியில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.