சேலம் பச்சப்பட்டி மெய்ன் ரோட்டில் பல மாதங்களாக அரசின் சட்ட விதிகளை மீறி சட்ட விரோதமாக இயங்கிவந்த அரசு டாஸ்மாக் மதுக்கடையை மூட வேண்டும் என்று பல முறை மாவட்ட அரசு நிர்வாகத்திற்கு மனுக்கள் செய்தும் பலனின்றி போகவே இறுதியாக அரசு டாஸ்மாக் மதுக்கடையை முற்றுக்கை செய்யும் போராட்டத்தை சேலம் மாவட்ட டி.என் .டி.ஜே அறிவித்தது.
பின்னர் குறிப்பிட்டப்படி வெள்ளிக்கிழமை (2-1-2009) 2.30 மணியளவில் டி.என்.டி.ஜே மாவட்ட தலைவர் எஸ்.நாசர் தலைமையில் … டி.என்.டி.ஜே மாநில துணைத் தலைவர் சகோ. பக்கிர் முஹம்மது அல்தாபி அவர்கள் கண்டன உரையாற்ற ஆண்களும் இபெண்களும் குழந்தைகள் உட்பட 450-க்கும் மேற்ப்பட்டோர் ஆவேசமான தக்பீர் முழக்கங்களுடன் போலீசாரின் தடுப்புக்களை தகர்த்துக்கொண்டு அரசு டாஸ்மாக் மதுக்கடையை முற்றுக்கையிட முயன்று கைதாயினர்.
இம் மாபெரும் போராட்டத்தின் பயனாக அடுத்தநாள் அரசு டாஸ்மாக் மதுக்கடை அகற்றப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்..!