அரசர்குளத்தில் TNTJ சார்பாக 28.05.09 அன்று TNTJ மேலாண்மை குழு உறுப்பினர் பீ.ஜெய்னுலாபிதீன் அவர்கள் கோடைகால பயிற்சி வகுப்பு நிறைவு நாள் பரிசளிப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி பரிசுகளை வழங்கினார்.
அப்பொழுது அரசர்குலம் தொழுகை பள்ளிவாசலில்,தொழுகையில் ஈடுபட்ட TNTJ உறுப்பினர்களை, ஒரு சிலர் தொழுகையில் ஈடுபடவிடாமல் தடுத்தனர்.தடுத்தவர்களையும்,மூடநம்பிக்கை மற்றும் இனவெறியை கண்டித்து பொதுக்கூட்டம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மாநில பேச்சாளர் A.முஜாஹித் சிறப்புரையாற்றினார்.புதுக்கோட்டை மாவட்ட தலைவர் S.நூர்முகமது தலைமை தாங்கினார்,மாவட்ட செயலாளர் A.R.சுல்தான்,மாவட்ட பொருளாளர் காதர் ஒலி,துணை செயலாளர் S.இப்ராஹீம்,அறந்தாங்கி நகர செயலாளர் K.S.ஆரிப் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட TNTJ மாணவர் அணி செயலாளர் அம்ஜத் மற்றும் துணை செயலாளர் ஹாஜா முன்னிலை வகித்தனர்.
எதிர்ப்பு பிரச்சாரம் வெற்றிகரமாக பதிவானது.