அய்யம்பேட்டை – சக்கராப்பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம்

கடந்த 7.05.10 திங்கட்கிழமை அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கும் மாவட்டம் அய்யம்பேட்டை – சக்கராப்பள்ளி  கிளையில் மாபெரும் கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. இம்முகாம்  திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை இணைந்து   நடத்தப்பட்டது.

இதில் மாவட்ட பொருளாளர் Z.முஹம்மது நுஃமான் அவர்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் சமுதாய பணிகள் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட மருத்துவரணி செயலாளர் காதர் மீரான் அவர்கள் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் H.சர்புதீன், கிளை தலைவர் முபாரக், கிளை பொருளாளர் ரஹ்மத் ஜான், கிளை செயலாளர் சித்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.