அம்மாபேட்டையில் 4 இடங்களில் ஜுலை 4 மாநாடு தெருமுனைப் பிரச்சாரம்

தஞ்சை தெற்கு மாவட்டம் அம்மாபேட்டை கிளையில் கடந்த 04.06.2010 அன்று ‘ஜூலை மாநாடு ஏன்?’ என்ற தலைப்பில் நான்கு இடங்களில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.

அம்மாபேட்டை ஆசாத் நகர், வடக்கு முஸ்லிம் தெரு, பள்ளிவாசல் தெரு மற்றும் எத்தன் தெரு ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் நடைபெற்றது.

பள்ளிவாசல் தெரு மற்றும் ஆசாத் நகரில் ‘ஜூலை மாநாடு ஏன்?’ என்ற தலைப்பில் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் அதிரை அன்வர் அலி அவர்களும், வடக்கு முஸ்லிம் தெரு மற்றும் தெருவில் ‘ஜூலை மாநாடு ஏன்?’ என்ற தலைப்பில் மௌலவி யாசர் அரஃபாத் இம்தாதி அவர்களும் உரையாற்றினார்கள்.

இதில் அனைத்து பகுதிகளிலும் மக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

பள்ளிவாசல் தெருவில் நடைபெற்ற பிரச்சாரத்தில் சுன்னத் வல் ஜமாஅத் பள்ளி நிர்வாகிகளும் அமர்ந்து உரையை கேட்டனர். மேலும், ஜூலை மாநாட்டிற்கு ஒத்துழைப்பு தருவதாகவும் வாக்குறுதி அளித்தனர். அல்ஹம்துலில்லாஹ்!