அம்மாபேட்டையில் நடைபெற்ற பெண்கள் பயான் மற்றும் கல்வி கருத்தரங்கம்

DSC00312DSC00309DSC00315DSC00333 (1)தஞ்சாவூர் தெற்கு மாவட்டம் அம்மாபேட்டையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அம்மாபேட்டை ரயிலடி கிளை சார்பாக 31.01.2010 அன்று ‘பெண்கள் பயான் மற்றும் கல்வி கருத்தரங்கம்’ அம்மாபேட்டையில் உள்ள சுடர் மண்டபத்தில் நடைபெற்றது.

காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த நிகழ்ச்சி மாலை 4.30 மணி வரை நடைபெற்றது.

இதில் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் Y. அன்வர் அலி அவர்கள் ‘தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் செயல்பாடுகள்’ என்ற தலைப்பிலும், மௌலவி யாசிர் அரஃபாத் இம்தாதி அவர்கள் ‘ஏகத்துவம்’ என்ற தலைப்பிலும், அந்நூர் அரபி கல்லூரி ஆசிரியை சகோதரி நாஜ்முன்னிஸா அவர்கள் ‘தொழுகையின் அவசியம்’ என்ற தலைப்பிலும், அந்தூர் அரபி கல்லூரி முதல்வர் சகோதரி ஸாபுர் நிஸா அவர்கள் ‘இஸ்லாத்தில் இல்லாத மூட பழக்கங்கள்’ என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.

சொற்பொழிவிற்கு பின்னர் நடைபெற்ற கேள்வி பதில் நிகழ்ச்சியில் அந்தூர் அரபி கல்லூரி முதல்வர் சகோதரி ஸாபுர் நிஸா அவர்கள் பதில் அளித்தார்கள்.

கல்வி கருத்தரங்களம் நிகழ்ச்சியில் சகோதரர் ஷமீம், M.Sc அவர்களும், ஹாஜா ஷரீஃப் அவர்களும் உரையாற்றினார்கள்.

இறுதியாக, சகோதரர் முஹம்மது ரபீக் அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.

இதில் 500 பெண்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ். நிகழ்ச்சியில் பங்கு கொண்ட பெண்கள், இது போன்ற நிகழ்ச்சிகள் அம்மாபேட்டை மற்றும் அதன் சுற்றுப்புற ஊர்களில் நடத்த வேண்டும் என்று நிர்வாகிகளிடம் கோரிக்கை வைத்தனர்.