அம்மாபட்டிணத்தில் காவல்துறையை கண்டித்து ஆர்பாட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் அம்மாபட்டிணத்தில் தவ்ஹீத் ஜமாஅத்தினர் மீது பொய் வழக்கு போட்ட காவல்துறையை கண்டித்தும் , உரிய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக் கோரியும் கடந்த 6-9-11 அன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநிலத் தலைவர் பி.ஜைனுல் ஆபிதீன் கலந்து கொண்டு தலைமை தாங்கினார்கள். மேலும் மேலாண்மைக்குழு உறுப்பினர் பக்கீர் அல்தாஃபி இதில் பங்கு பெற்றார்கள். ஆண்கள் பெண்கள் என ஏராளமானோர் இதில் கலந்து கொண்டு தங்களின் கண்டனங்களை பதிவு செய்தனர்.