அமெரிக்க விசாவை வாங்க ஆள் இல்லை – குறைந்துவரும் அமெரிக்க மோகம்

ஒவ்வொறு ஆண்டும் அமெரிக்க விசாகளுக்கு தட்டுபாடுதான் ஏற்படும். ஒபாமா பதவி ஏற்ற பிறகு விசாவின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டது. இப்படி இருந்தும் இந்த ஆண்டு 11, 000 H1B விசாக்களை வாங்க ஆளில்லை. அமெரிக்கா இந்தியாவுக்கு 65,000 விசாக்களை ஒதுக்குகின்றது. இது கடந்த 2008 ஆம் ஆண்டில், ஏப்ரல் மாதமே தீர்ந்துவிட்டது. 2009 -ல் கூட டிசம்பர் 21 – ல் அனைத்தும் தீர்ந்து விட்டது. ஆனால் இந்த வருடம் வாங்க ஆள் இல்லாமல் 11, 000 H1B விசாக்கள் தேங்கிவிட்டது. இது போல் எந்த வருடமும் நடந்ததில்லை என அமெரிக்க தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் பொருளாதார வீழ்ச்சியினால் பெரும்பாலான இந்தியர்கள் அமெரிக்காவை தேர்ந்தெடுப்பதில்லை. பிற நாடுகளின் பக்கம் இந்தியர்களின் கவனம் திரும்பி உள்ளது.

அமெரிக்கா தொடர் பொருளாதார சரிவில் இருந்து இன்னும் மீள முடியவில்லை. ஒபாமா பதவி ஏற்ற பிறகு இன்னும் 3 % வளர்ச்சியை கூட எட்ட முடியவில்லை. ஒபாமா வெறும் வாய் பேச்சுதான், உருப்படியாக இன்னும் அவர் ஒன்றும் செய்ய முடியவில்லை. பிற நாடுகளை ஒடுக்குவதற்க்கே பல பில்லியன் டாலர்களை செலவு செய்தால் நாடு எப்படி உருப்படும். உண்மையில் சொல்லப்போனால் அமெரிக்கா திவாலாகிவிட்டது. ஆனால் உலக அளவில் நடக்கும் வர்தகங்களில் தரகு வேலை (வாங்கி – விற்ப்பது) பார்த்தே தனது நாட்டை ஓட்டி கொண்டு இருக்கின்றது அமெரிக்கா. குறிப்பாக சொல்ல போனால் எண்ணை வர்த்தகத்தில் அரபு நாடுகளிடம் இருந்து வாங்கி பிற நாட்டிற்க்கு விற்பதிலேயே பல டிரில்லியம் டாலர் லாபம் பார்த்தது அமெரிக்கா. மேலும் யூக வணிகம் மூலம் பிற நாட்டு விலைவாசியை ஏற்றிவிட்டு தன் வயிற்றை நிரப்பிக்கொள்கின்றது அமெரிக்கா. அமெரிக்காவிற்க்காக நாட்டையே அடகுவைக்கும் அரசியல் வாதிகள் இருக்கும் வரை அமெரிக்கா எப்படி திருந்தும்.

S.சித்தீக்.M.Tech