புஜைராவில் கூடிய அமீரக ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் கடந்த 22.10.10 வெள்ளிகிழமை மதியம் 2:30 மணிக்கு அமீரக ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் மண்டல ஒருங்கிணைப்பாளர் சகோ. ஹாமீன் இபுராஹீம் அவர்கள் தலைமையில் மாநில தணிக்கைகுழு உறுப்பினர் சகோ. சர்புதீன் அவர்கள் முன்னிலையில் புஜைரா மண்டலத்தின் குர்பகான் இந்தியன் சோசியல் அசோசியேசன் கிளப் ல் நடைபெற்றது.

நிர்வாகிகளின் அறிமுகத்திற்கு பின்பு கடந்த மண்டல கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை சகோ. ஹாமீன் இபுராஹீம் அவர்கள் நினைவு படுத்தினார்கள். பின்பு மண்டலங்களின் செயல் பாட்டு அறிக்கை சமர்பிக்கப்பட்டது.

ஜூலை 4 மாநாட்டின் வரவு செலவுக் கணக்கை மாநில தணிக்கைகுழு உறுப்பினர் சகோ. சர்புதீன் அவர்கள் சமர்பித்தார்கள்.2010 ஆம் ஆண்டின் பித்ரா வரவு செலவு வாசிக்கப்பட்டது.

பின்பு மார்க்கப் பிரச்சாரத்தை நவீன முறையில் கொண்டு செல்வதற்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

பிறகு மண்டல ஒருங்கிணைப்பாளர் தேர்வு மாநில தணிக்கைகுழு உறுப்பினர் சகோ. சர்புதீன் அவர்கள் தேர்தல் அதிகாரியாக இருந்து நடத்தினார்கள்.

அதில் சகோ. ஹாமீன் இப்ராஹீம் அவர்கள் அடுத்த இரண்டு வருடத்திற்கு மண்டல ஒருங்கினைப்பளராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்கள்.