அமீரக அனைத்து மண்டல தஃவா கூட்டம் – துபை

அல்லாஹ்வின் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமீரக அனைத்து மண்டல கூட்டம் தேய்ரா மர்கசில் அமீரக ஒருங்கினைப்பாளர் சகோ.ஹாமீன் இபுராஹிம் அவர்களின் தலைமையில் நடைப்பெற்றது.

மதியம் 2.15 மணியளவில் ஆரபிக்கப்பட்ட இந்த கூட்டத்தில் முதலில் அமீரக ஒருங்கினைப்பாளர் சகோ.ஹாமீன் இபுராஹிம் அவர்கள் உரையாற்றினார்கள்.

அதனை அடுத்து துபை மண்டல தலைவர் மெளலவி.முஹம்மது நாஸிர் MISC அவர்கள் அரபி பயிற்சி வகுப்பு நடத்தினார்.

பின்பு தாயகத்திலிருந்து ஆன்லைன் மூலமாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைவர் மெளலவி.பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் “அழைப்பாளர்களின் கவனத்திற்கு” என்ற தலைப்பில் இன்றைய எதார்த்த எடுத்துகாட்டுடன் சிந்திக்ககூடிய உரை ஒன்றை நிகழ்த்தினார்கள். இது அழைப்பாளர்கள் மிகவும் அவசியமான உரையாகவும் இருந்தது. அல்ஹம்துலில்லாஹ்.

மேலும் இந்த நிகழ்ச்சி ஆன்லைன் பிஜே இணையதளத்திலும் நேரடியாக ஒளிப்பரப்பு செய்யப்பட்டது.

அதனை தொடர்ந்து இரண்டாவது அம்ர்வாக தாயிக்கள் மற்றும் நிர்வாகிகளுக்கான கலந்துரையாடல் நடைப்பெற்றது.

பிறகு ”அரபி வகுப்பு” இரண்டாம் பாகத்தை துபை மண்டல தலைவர் மெளலவி.முஹம்மது நாஸிர் MISC அவர்கள் நடத்தினார்.

இந்த கூட்டத்தின் வாயிலாக பல்வேறு செய்திகளை அறிந்த்வர்களாக தாயிக்கள் புதிய புத்துணர்வுடன் கலைந்து சென்றனர். அல்ஹம்துலில்லாஹ்

நிகழ்ச்சிகான ஏற்பாட்டை துபை மண்டல் நிர்வாகிகள் சிறப்பான முறையில் செய்துயிருந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!