அமீரக அனைத்து மண்டலக்கூட்டம் – அல் அய்ன்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமீரக அனைத்து மண்டலக்கூட்டம் சென்ற 13.01.2012 அன்று அல் அய்னில் நடைபெற்றது. ஜும்மாவுக்கு பின் சரியாக 2 மணியளவில் துவங்கிய இக்கூட்டத்துகு அமீரக அனைத்து மண்டல TNTJ ஒருங்கிணைப்பாளர் சகோ. ஹாமீன் இப்ராஹிம் அவர்கள் தலைமை வகித்தார்கள்.

இந்தக் கூட்டத்தில் பிப்ரவரி 14 வாழ்வுரிமைப் போராட்டம், தலைமை கட்டிட நிதி, அமீரகத்தில் தஃவாவை மேம்படுத்துதல் போன்ற விஷயங்கள் குறித்து ஆலோசனை செய்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

இந்த மண்டல கூட்டத்தில் அபுதாபி, அஜ்மான், அல்அய்ன், துபை, ஃபுஜைரா, ராஸல் கைமா மற்றும் ஷார்ஜா ஆகிய மண்டலங்கலிருந்து நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிகான ஏற்பாட்டை அல் அயன் மண்டல TNTJ நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!