அபு தாபி இரத்த தான முகாம் – 105 நபர்கள் இரத்த தானம்

கடந்த 13/04/2012 வெள்ளிக்கிழமை மாலை 3.00 மணிக்கு அபுதாபி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக இரத்த தான முகாம் நடைபெற்றது. அபுதாபி ஷேக்கலீபா மெடிக்கல் சிட்டி இரத்தவங்கியுடன் இணைந்து இம்முகாம் நடத்தப்பட்டது.

மாலை 3 மணிமுதல் இரவு 8.30 மணிவரை நடைபெற்ற இந்த இரத்த தான முகாமில் மொத்தம் 113 சகோதரர்கள் குருதி கொடையளிக்க முன்வந்தனர். இவர்களில் 105 சகோதரர்கள் மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் இரத்த தானம் செய்தனர். அல்ஹம்துலில்லாஹ்.

இரத்த தான முகாமிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அபுதாபி மண்டலம் மற்றும் ஐகாட் சிட்டிக் கிளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் மிகச் சிறப்பாக செய்திருந்தனர். வாகன வசதி மற்றும் இரத்த தானம் செய்ய வந்த சகோதரர்களின் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்தல் போன்ற பணிகளை தொண்டரணியினர் மிகச்சிறப்பாக செய்திருந்தனர்..