அபுதாபி TNTJ முஸ்ஸஃபா கிளை சார்பாக ரூபாய் 8 ஆயிரம் மருத்துவ உதவி

கும்பகோண‌த்தை சேர்ந்த ரஹ்னாதுல்லாஹ் மகள் ரிஸ்வான என்ற இரண்டு வயது பெண் குழந்தைக்கு இரண்டு காதுகளும் கேட்கும் திறன் இழந்துள்ளதை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.

இதை உடனே அறுவை சிகிட்சை மூலம்தான் சரி செய்ய முடியும் இதற்காக குறைந்தபட்சம் ஆறு லட்சம் வரை செலவு ஆகும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதனை அறிந்த சகோ. ரஹ்னாத்துல்லாஹ் அவர்களின் நண்பர், இவ்வளவு தொகையை எனது நன்பரால் செலவு செய்ய இயலாத நிலமையில் உள்ளார், உங்கள் தவ்ஹீத் ஜமாஅத் மூலம் இயன்ற வரை ஏற்பாடு செய்து தாருங்கள் என மருத்துவ சான்றிதளுடன் அபுதாபி TNTJ  முஸ்ஸஃபா கிளையில்  கோரிக்கை மனு  அளித்தார்.

இதை பரிசிலனை செய்து பாதிக்கபட்ட பெண் குழந்தைக்கு மருத்துவ உதவிக்காக அபுதாபி TNTJ  முஸ்ஸஃபா கிளை    மூலம் இந்திய ருபாய் 8,000 அனுப்பிவைக்கபட்டுள்ளது.