அபுதாபி TNTJ நடத்திய பேச்சு போட்டி!

DSC00759DSC00758DSC00756DSC00755DSC00753DSC00752DSC00748DSC00716DSC00713அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் அழைப்பு பணியின் வெற்றி பயணம் தமிழகத்தையும் தாண்டி உலக முழுவதும் வெற்றி நடைப் போட்டு கொண்டு இருப்பது யாரும் மறுக்க முடியாத உண்மை.அல்ஹம்துலில்லாஹ்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் முக்கிய பிரச்சாரமான நன்மை ஏவி தீமையை தடுக்கும் பணியினை சீரிய முறையில் செய்வதற்க்காக தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டலம் சிந்திக்கும் மக்கள் அனைவருக்கும் சத்தியத்தை எடுத்து சொல்லவேண்டும் எனும் அடிப்படையில் புதிய பேச்சாளர்களை உருவாக்குவதற்க்காக பேச்சுப் பயிற்ச்சி வகுப்புகள் பல நடத்தி பல பேச்சாளர்களை உருவாக்கியுள்ளது.

இந்த பேச்சாளர்கள் தாயகத்திலும் பிரச்சார பீரங்கிகளாக செயல்பட்டு வருகின்றனர் என்பது நிகழும் உன்மையாக உள்ளது.

வளைகுடா பகுதியான ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டல ஐகாட் கிளையில் சில மாதங்களுக்கு முன் பேச்சாளர்களுக்கான பயிற்சி வகுப்பு நடத்தபட்டது.

இதில் ஆறு நபர்கள் பேச்சாளர்களாக தேர்வு பெற்றனர். சத்தியத்தை எடுத்து சொல்லவேண்டும் எனும் எண்ணத்தினை பிரதிபலிக்கும் வகையில் மிக ஆர்வமாக கலந்து கொண்ட அவர்களை ஊக்கபடுத்துவதர்க்காக கடந்த 20.11.09 வெள்ளிக் கிழமை மாலை மிக சரியாக ஆறு மணிக்கு முஸ்ஸஃபா கிளையின் மர்க்கஸான கிளீன்கோ ‘சி’ கேம்ப் பள்ளியில் வைத்து புதுமுகங்கள் ஒரு அறிமுகம் என்ற தலைப்பில் புதிய பேச்சாளர்களை வைத்து பேச்சு போட்டி நிகழ்ச்சி ஒன்று நடத்தபட்டது.

இந்த போட்டியில். சகோ மேலப்பாளையம் ஜமால் அவர்கள் கொடிய வரதட்சணையும் கோரமுகமும் என்ற தலைப்பிலும் சகோ இளையான்குடி பயாஸ் அவர்கள் இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்துவிடுங்கள் எனும் தலைப்பிலும் சகோ பொள்ளாச்சி பஷீர் அவர்கள் தின்ணை தோழர்கள் என்ற தலைப்பிலும் சகோ சென்னை ஹம்ஸா அவர்கள் திருக் குர்ஆன் உருவாக்கிய சமுதாயம் என்ற தலைப்பிலும் சகோ மேலப்பாளையம் முக்தார் அவர்கள் தொலை நோக்கு பார்வை என்ற தலைப்பிலும் சகோ ஆறாம்பண்ணை முஹம்மது ரபிக் அவர்கள் அழைப்பு பணி என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்.

இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய அபுதாபி மண்டல தலைவர் முஹம்மது ஷேக் அவர்கள் தமிழகத்தில் அரபி கல்லுரிகளில் பல ஆண்டுகளாக மார்க்கத்தை பயிலும் பெரும்பாலான சகோதரர்கள் வெளியில் வருகிறபோது பல விழாக்களை நடத்திவிட்டு மார்க்க அடிப்படை ஒன்றும் அறியாதவர்களாகவே வெளியில் வருகின்றனர். என்னதான் இத்தனை வருடம் படித்தீர்கள் என்று கேட்டால் இலக்கணம் படித்தோம் என்று தலைக்கனத்தோடு பதில் சொல்கின்றனர். மேலும் தங்களை ஆலிம் என்று அறிமுகப்படுத்தும் பலர் நாம் பார்த்த வகையில் கொள்கையில்லாமல் கோமாளிகளாகத்தான் சுற்றி வருகின்றனர் என்பதை நிகழும் சம்பவங்களை சுட்டிக் காட்டி விளக்கினார். நபி (ஸல்) அவர்கள் தன்னுடய இறுதி ஹஜ்ஜில் இப்படி சொன்னார்கள் என்னிடத்தில் ஒரே ஒரு செய்தியை கேட்டால் அதை பிற மக்களிடம் எடுத்து சொல்லிவிடுங்கள் இங்கே வந்திருப்பவர்கள் வராத மக்களிடம் போய் சொல்லிவிடுங்கள் என்று சொன்ன செய்தியை உறுதிபடுத்தும் வண்ணமாக இவர்கள் சிறந்த பேச்சாளர்களாக உருவாகியிருப்பது சில சொற்ப்ப மாதங்களிலே என்று இறைவனுக்கு நன்றி கூறி நிறைவு செய்தார்.

இந்த நிகழ்ச்சிக்கு பார்வையாளர்ளே நடுவர்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. எத்தனையோ வீண்; வேலைகள் முன்னால் இருந்தாலும் அதையெல்லாம் பின்னால் தள்ளிவிட்டு புதிதாய் பூத்த மலர்களை பூக்களாக மாற்றுவதர்க்கு நாங்களும் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிருபிக்கும் வகையில் மக்களும் வெள்ளம் போல் திரண்டு வந்தது தவ்ஹீத் ஜமாத்தின் மேல் அவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை உறுதிபடுத்துவதாக அமைந்திpருந்தது. போட்டியில் கலந்து கொண்ட ஆறு சகோதரர்களுக்கும் பரிசுகள் வழங்கபட்டது முதல் பரிசினை ஆறாம்பண்ணை முஹம்மது ரபிக் அவர்களும் இரண்டாம் பரிசினை மேலப்பாளையம் ஜமால் அவர்களும் மூன்றாம் பரிசினை இளையான்குடி ஃபயாஸ் அவர்களும் பெற்றனர் மற்றும் மூன்று சகோதரர்களுக்கு ஆறுதல் பரிசுகள் வழங்கபட்டது.

அமீரக ஒருங்கிணைப்பாளர் ஹாமீன் இபுறாஹீம் அவர்களும் மற்றும் மண்டல நிர்வாகிகளும், முஸ்ஸஃபா, ஐகாட் கிளை தலைவர்களும் பரிசுகளை வழங்கினார்கள்.நிகழ்ச்சியின் இறுதியில் மறுமை வெற்றி யாருக்கு எனும் தலைப்பில் ஹாமீன் இபுறாஹீம் அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.

நிகழச்சிக்கான ஏற்பாடுகளை முஸ்ஸஃபா கிளை தலைவர் புளியங்குடி முஹம்மது கனி மற்றும் ஐகாட் கிளை தலைவர் தென்காசி ஷரிஃப் தலைமையில் அனைத்து நிர்வாகிககளும் சிறப்பாக செய்திருந்தனர். அல்ஹம்துலில்லாஹ்.