அபுதாபி மேலப்பாளையம் TNTJ சார்பாக ரூபாய் 17500 நிதியுதவி

திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தை சேர்ந்த பஷீர் என்ற சகோதரர் அபுதாபியில் உள்ள கிளீனிங் கம்பேனிக்கு சுமார் ரூபாய் 70.000 செலவு செய்து வேலைக்கு வந்தார்.

அவர் இங்க வருதற்க்கு முன்னால் நெல்லை மாவட்டத்தில் பரவி வந்த திடீர் காய்ச்சலில் பாதிக்கபட்டுயிருந்தார், அது முழுவதும் குணமடைந்து விட்டதாக நினைத்துக் கொண்டு விசா வந்தவுடன் மருத்துவ பரிசோதனை செய்யாமல் அபுதாபிக்கு வந்து விட்டார்.

வந்தவுடன் அபுதாபியில் உள்ள மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது UNFIT ஆகிவிட்டது. ஆகயால் அவர் உடனே ஊர் திரும்பும் சூழ்நிலை ஏற்பட்டு விட்டது.

அந்தச் சகோதரர்  கடன் வாங்கிதான் வெளிநாடு வந்துள்ளார். தற்போது வேலை செய்யமுடியாமல் ஊர் திரும்பும் நிலையில் மிகவும் சிரமப்படுகின்றார். அவர் சிரமத்தில் இருப்பதை அவர் நன்பர்கள் மூலம் அறிந்து கொண்டு அபுதாபி TNTJ மேலப்பாளையம் நிர்வாகிகள் அவரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி அவரின் கடன் சுமையை குறைப்பதற்க்கு ரூபாய் 17500 ஐ அபுதாபி மேலப்பாளையம் TNTJ பொருலாளர் பஷீர் மீரான் அவர்கள் அவரிடம் வழங்கினார்.