அபுதாபி முஸ்ஸாபா கிளையில் நடைபெற்ற சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி

11865330-8-09 மற்றும் 10-9-09 ஆகிய நாட்களில் தாயகத்தில் இருந்து வருகை தந்துள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில பேச்சாளரும் கடையநல்லூர் இஸ்லாமிய கல்லூரி பேராசிரியருமான சகோ. அப்துல் கரீம் M.I.Sc அவர்கள் சின்னத்திரையில் சீரழியும் சமுதாயம் மற்றும் தண்டனைகளும் படிப்பினைகளும் ஆகிய தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.

6-9-09 அன்று தாயகத்தில் இருந்து வருகை தந்துள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில மேலாண்மைக்குழு உறுப்பினரும் கடையநல்லூர் இஸ்லாமிய கல்லூரி முதல்வருமான சகோ. S.S.U ஸைபுல்லாஹ் ஹாஜா அவர்கள் உமர்(ரலி)அவர்களின் வீரவரலாறு என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.

மேலும் தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி TNTJ முஸ்ஸாபா கிளையின் சார்பாக ரமலான் ஆரம்பத்தில் ரமலான்சம்பந்தமான சட்டங்களை தெரிந்துக்கொள்வதற்கு சாகோதரர் PJ உரை ஆற்றிய நோன்பின் சட்டங்கள் தலைப்பிலான 600 குறுந்தகடுகள் இலவசமாக முஸ்ஸாபா, ஷாபியா, ICAD ஆகிய இடங்களில் வினியோகம் செய்யப்பட்டது.