அபுதாபி முஸ்ஸஃபா கிளை பொதுக்குழு

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி  முஸ்ஸஃபா கிளை மர்க்கசில் கிளை பொதுக்குழு கூட்டம் கடந்த 12-05-10 புதன் கிழமை அன்று அபுதாபி மண்டல தலைவர் முஹம்மது ஷேக் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

முதலில் முஸ்ஸஃபா கிளை தலைவர் புளியங்குடி முஹம்மது கனி அவர்கள் கடந்த வருட முஸ்ஸஃபா கிளை மூலம் சமுதாயம், மார்க்கம் சம்பந்தமாக செய்து வந்த பணிகளை பட்டியலிட்டு நினைவுபடுத்தினார், இதனை தொடர்ந்து முஸ்ஸஃபா கிளை பொருளாலர் தஞ்சை சாதிக் அவர்கள் வரவு செலவு கணக்குகளை வாசித்து காட்டினார்.

இதனை தொடர்ந்து மண்டல தலைவர் முஹம்மது ஷேக் அவர்கள் முஸ்ஸஃபா கிளை அனைத்து செயல்பாடுகளிளும் சிறப்பாக செய்து வந்ததை சுட்டிக்காட்டி, அடுத்து வரகூடிய நிர்வாகம் இன்னும் சிறப்பாக செயல்படவேண்டும் கேட்டு கொண்டார்கள். பின்னர்  உறுப்பினர்கள் மத்தியில் புதிய நிர்வாகிகள் தெர்வு செய்யப்பட்டனர்.