அபுதாபி முஸ்ஸஃபா கிளை சார்பாக ரூபாய் 5000 மதிப்பிற்கு புத்தம் மற்றும் சீடிக்கள்

Mussafah - Achanputhur 3Mussafah - Achanputhur 2Mussafah - Achanputhur 5அல்லாஹ்வின் மிக பெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டல முஸ்ஸஃபா கிளையின் மூலம் முதியோர் நல உதவி, மருத்துவ உதவி, கல்வி உதவி, என ஏராளமான எண்ணற்ற உதவிகள் செய்யப்பட்டுவருகிறது. அல்ஹம்துலில்லாஹ்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டல முஸ்ஸஃபா கிளையின் மூலம் கடந்த மாதம் நெல்லை மாவட்டம் அச்சன்புதூர் தவ்ஹீத் ஜமாஅத் மர்க்கஸில் படிக்கும் ஏழை மாணவ மாணவிகளுக்கு ரூபாய் 5000 மதிப்பிலான இஸ்லாமிய அடிப்படை கல்வி 40 புத்தகங்கள் மற்றும் சகோ பிஜே அவர்கள் மொழி பெயர்த்த 10 திருக்குர்ஆன்களும் வழங்கபட்டது.

இதை நெல்லை மாவட்ட TNTJ துணை தலைவர் ஜபாருல்லாஹ் அவர்கள் வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சி அபுதாபி மண்டலத்தின் முஸ்ஸஃபா கிளை துணை தலைவர் அச்சன்புதூர் மைதீன் அவர்கள் மேற்பார்வையில் நடைபெற்றது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில மேலாண்மை குழு உறுப்பினர் சகோ அப்துல் நாசர் அவர்கள் கலந்து கொண்டு சிற்ப்புரை நிகழ்த்தினார். இதற்க்கான மொத்த செலவையும் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டலத்தின் முஸ்ஸஃபா கிளை ஏற்பாடு செய்து கொடுத்தது. என்பது குறிப்பிடதக்கது.. எல்லாப் புகழும் இறைவனுக்கே…