அபுதாபி முஸ்ஸஃபா கிளையில் நடைபெற்ற மருத்துவ விழிப்புணர்வு முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டலத்தின் முஸ்ஸஃபா கிளை சார்பாக கடந்த 09-07-09 அன்று அல்லாஹ்வின் கிருபையால் மாபெரும் மருத்துவ விழிப்புணர்வு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

4211256இரவு 9.45 மணிக்கு துவங்கிய இந்நிகழ்ச்சிக்கு அபுதாபி மண்டல தாஃவா அணி செயலாளர் சகோ. தஞ்சை உசேன் அவர்கள் தலைமை தாங்கினார்கள்.

அதை தொடர்ந்து மண்டல தலைவர் சகோ. முஹம்மது ஷேக் அவர்கள் புகை, பாக்கு (பான்பராக்), மது, ஆகியவற்றால் ஏற்படும் பாதிப்புகள் என்ன என்று தெளிவான முறையில் விளக்கினார்கள் குறிப்பாக இந்த பழக்கத்தினால் சீரழியும் உள் உறுப்புகளையும் வெளிபுறமாக உடலில் ஏற்படும் பாதிப்புகளையும் திரையிட்டு தக்க புள்ளி விபரங்களுடனும் குறும் படங்களாகவும் மக்களுக்கு காண்பிக்கபட்டது, முடிவில் சகோ ஹாமின் இப்றாஹிம் அவர்கள் இறையச்சம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கும்; மேற்பட்ட முஸ்லிம் மற்றும் பிறமத சகோதரர்கள் கலந்து கொண்டார்கள். இந்த நிகழ்ச்சி ஏற்பாடுகளை முஸ்ஸபா கிளை தலைவர் புளியங்குடி கனி தலைமையில் அனைத்து நிர்வாகிகளும் சிறப்பாக செய்தனர். அல்ஹம்துலில்லாஹ்