அபுதாபி முஸாஃபாவில் நடைபெற்ற இளைஞர்கள் விழிப்புணர்வு மாநாடு

abudabi_thawa_nigalchi_1abudabi_thawa_nigalchi_3abudabi_thawa_nigalchi_2abudabi_thawa_nigalchi_4அபுதாபி மண்டலத்தின் முஸாஃபா மற்றும் ICAD City கிளைகள் இணைந்து கடந்த 16-04-2009 அன்று முஸாஃபா Cleanco C கேம்பில் இளைஞர்கள் விழிப்புணர்வு மாநாடு அல்லாஹ்வின் கிருபையால் சிறப்பாக நடைபெற்றது.

இம்மாநாட்டிற்கு முஸாஃபா கிளை செயலாளர் அச்சன்புதூர் மைதீன் அவர்கள் தலைமை தாங்கினார்கள். அமீரக தவ்ஹீத் ஜமாஅத் அழைப்பாளர் சகோ. பேரணாம்பட்டு ஜாகிர் அவர்கள் ‘இஸ்லாத்தின் பார்வையில் இளைஞர்கள் அன்றும் இன்றும்’ என்ற தலைப்பிலும் அமீரக தவ்ஹீத் ஜமாஅத் ஒருங்கிணைப்பாளர் சகோ. ஹாமீன் இப்ராஹீம் அவர்கள் ‘இஸ்லாமிய இளைஞர்கள் மத்தியில் கல்வி விழிப்புணர்வு’ என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்.

இறுதியாக ICAD City கிளை செயலாளர் கடையநல்லூர் ஷேக் உதுமான் அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.

மாநாட்டிற்க்கான ஏற்பாடுகளை முஸாஃபா கிளை தலைவர் புளியங்குடி முஹம்மது கனி மற்றும் ICAD City கிளை தலைவர் ஆத்தூர் ஹாஜா ஆகியோரின் தலைமையில் கிளை நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர். இம்மாநாட்டில் அபுதாபி, முஸாஃபா மற்றும் ICAD City பகுதியில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.