அபுதாபி முஸாஃபாவில் கல்வி வழி காட்டல் சிறப்பு முகாம்

abudabi_kelvi_mugamஅபுதாபி தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக முஸாபா கிளீன்கோ சி கேம்ப் வளாகத்தில் கடந்த 23.05.2009 வியாழன் அன்று இஷா தொழுகைக்கு பின்னர் முதல் முறையாக கல்வி வழி காட்டல் முகாம் நடத்தப்பட்டது.

தமிழகத்தில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ள இந் நிகழ்ச்சிக்கு தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதியான இங்கும் மிகப் பெரும் வரவேற்;பு இருந்ததை காண முடிந்தது தமிழகத்திலுள்ள தங்களது குழந்தைகளின் எதிர்கால நலன் கருதி இந்நிகழ்சிக்கு வந்திருந்தவர்கள் தங்கள் பிள்ளைகள் மற்றும் சகோதரசகோதரிகளின் உயர்கல்வி சம்மந்தமாய் ஆலோசனைகள் மற்றும் கேள்விகள் கேட்டார்கள்.

கேள்விகளுக்கான பதில் மற்றும் ஆலொசனைகளை அபுதாபி தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைவர் முஹம்மதுஷேக் அவர்கள் வழங்கினார்கள். மேலும் சகோதரர் சென்னை இஸ்மாயீல் அவர்கள் பயனுள்ள கல்வி என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

இன்ஷாஅல்லாஹ் இனிவரும் காலங்களில் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளை தவ்ஹீத் ஜமாஅத் ஐக்கிய அமீரகம் தழுவிய அளவில் நடத்த வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.