அபுதாபி மண்டல ஐகாட் சிட்டி கிளையில் நடைபெற்ற கேள்வி பதில் நிகழ்ச்சி

P1280051P1280050தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டல ஐகாட் சிட்டி கிளையின் மர்க்கஸான ETA 13 நம்பர் கேம்ப் பள்ளியில் சமுதாய மற்றும் மார்க்க சம்பந்தமான கேள்வி பதில் நிகழ்ச்சி கடந்த 18.02.10 வியாழன் அன்று இரவு 9.30 மணிக்கு கிளை தலைவர் செங்கோட்டை ஹாஜா தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமிரக ஒருங்கிணைப்பாளர் சகோ ஹாமீன் இபுராஹீம் அவர்கள் மார்க்கம் மற்றும் சமுதாய சம்பந்தமான கேள்விகளுக்கு ஆதாரப்பூர்வமாகவும் ஆணித்தரமாகவும் பதில் கூறினார்,

இதில் பல சகோதரர்கள் கேள்வி கேட்டனர், முக்கிய கேள்வியாக திருமண பதிவுச் சட்டத்தை ஏன் தவ்ஹீத் ஜமாஅத் ஆதரிக்கின்றது?, பன்றி இறைச்சியை இஸ்லாம் ஏன் தடைசெய்தது?, அகிகா எவ்வாறு கொடுப்பது, மற்றும் இரவு தொழுகை சம்பந்தமான கேள்விகள் கேட்கப்பட்டது, சில கேள்விகள் பழய கேள்விகளாக இருந்தாலும் கேள்வி கேட்ட அனைத்து சகோதரர்களும் புதிய சகோதரர்களே!

அனைத்து கேள்விகளுக்கு சகோ ஹாமீன் இபுறாஹீம் அவர்கள் பதில் சொன்னவிதம் அனைவருக்கும் திருப்திகரமாக அமைந்துயிருந்தது..

நிகழ்ச்சி ஏற்பாட்டை கிளை தலைவர் செங்கோட்டை ஹாஜா தலைமையில் அனைத்து நிர்வாகிகளும் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

இதில் ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்