அபுதாபி மண்டலம் ஐகாட் கிளையில் நடைபெற்ற ஆன்லைன் நி்கழ்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  அபுதாபி மண்டலம் ஐகாட் கிளையில் முதல் முறையாக கடந்த  09-04-10 ம் தேதி ஆன்லைன் மூலம் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்  நிகழ்ச்சி அபுதாபி மண்டல தலைவர் முஹம்மது ஷேக் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

கேள்வி பதில் நிகழ்ச்சி சீராக நடைபெற நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே கேள்வி கேட்க விரும்புவோருக்கு டோக்கன் வழங்கப்பட்டது சரியாக அமிரக நேரப்படி மாலை 7 மணிக்கு ஆன்லைன் நிகழ்ச்சி ஆரம்பமானது.

இதில் தலைமையகத்திலிருந்து  மௌலவி பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் ன்லைன் மூலம் கேடக்கபட்ட  கேள்விகளுக்கு ஆதாரத்தோடும் அறிவிப்பூர்மாக பதில் அளித்தார்கள் இரண்டு மணி நேரம் நீடித்த இந்த நிகழ்ச்சியில் 10 கேள்விகளுக்கு பதில் அளிக்கபட்டது.

இதில் முக்கிய கேள்வியாக இந்திய ரானுவத்தில் முஸ்லிம்கள் சேர்ந்து பணியாற்றலாமா? இன்ஷா அல்லாஹ் ஜீலை 4ல் மாநட்டிர்க்கு பிர இயக்கம் தலைவர்களை அழைக்காதது ஏன்? என்பன கேள்விகளுக்கு சகோதரர் பதில் அளித்தவிதம் அனைவருக்கும் திருப்திகரமாக இருந்தது.

இந்த  நிகழ்ச்சியில் ஏராளமான சகேதாரகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர், நிகழ்ச்சி ஏற்பாட்டை ஐகாட் கிளை தலைவர் செங்கோட்டை ஹாஜா தலைமயில் அனைத்து நிர்வாகிளும் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.