அபுதாபி பனியாஸ் 2வது கிளையில் ரமளான் சிறப்பு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் அபுதாபி மண்டலம் பனியாஸ் 2வது கிளையின் சார்பாக கடந்த 01-09-2010 புதன் கிழமையன்று இரவு 9.15.மணிக்கு மாபெரும் மார்க்க கூட்டம் பனியாஸ்சில் மஜண்டா கேம்பில் நடைப்பெற்றது.

இக்கூட்ட்த்தில் தாயகத்தில் இருந்து வருகை தந்துள்ள தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத்தின் மாநில துணை தலைவர் சகோதரர் M.I சுலைமான் அவர்கள் முஸாஅப் பின் உமைர் {ரலி} அவர்களின் வாழ்வுதரும் படிப்பினை என்ற தலைப்பில் எழுச்சி உரை நிகழ்த்தினர்கள்.

அதனை தொடந்து மார்க்க சம்பந்தமான கேள்விகள் கேட்டு பதில்களுக்கு பதில் அளிக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு அபுதாபி மண்டல கிளைகளின் பொறுப்பாளர் புளியங்குடி முஹம்மதுகனி தலைமை தாங்கினர்.

இந்த நிகழ்சியில் ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். அனைத்து ஏற்படுகளும் பன்யாஸ் 2வது கிளை தலைவர் பஸீர் தலைமையில் சிறப்பான ஏற்பாடு செய்யப்பட்டன அல்ஹ்ம்துலில்லாஹ்