அபுதாபி செனைய்யா கிளையில் TNTJ வின் புதிய கிளை!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அபுதாபி மண்டலத்தின் எட்டாவது கிளையாக புதிய கிளை செனைய்யா பகுதியில் கடந்த 14-4-2010 அன்று தொடங்கபட்டது.

அபுதாபி மண்டல செயலாளர் அப்துஸ் சலாம் அவர்கள் தலைமையில் நடைபெற்ற, இந்த நிகழ்ச்சிக்கு ஐகாட் கிளை தலைவர் செங்கோட்டை ஹாஜா, மற்றும் முஸ்ஸஃபா கிளை தலைவர் புளியங்குடி முஹம்மது கனி ஆகியோர் முன்னிலையில் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

மேலும் இக்கூட்டத்தில் வாரந்தோரும் மஃரிப் தொழகைக்கு பிறகு மார்க்கச் சொற்பொழிவு நடத்துவதெனவும், மக்கள் இருப்பிடம் சென்று மார்க்க பிரச்சாரம் செய்வதனவும், வாராந்திர துன்டு பிரசுரம் வினியோகம் செய்வதெனவும் முடிவு செய்யப்பட்டது