அபுதாபி ஐகாட் சிட்டி கிளையின் செயற்குழுக்கூட்டம்

icad-1icad-2icad-3அல்லாஹ்வின் கிருபையால் கடந்த 09.01.2010 சனிக்கிழமை அன்று அபுதாபி மண்டலம் ஐகாட் சிட்டி கிளையின் செயற்குழுக்கூட்டம் கிளைத்தலைவர் சகோ.தென்காசி முஹம்மது ஷரீப் தலைமையில் நடைபெற்றது.அபுதாபி மண்டலத் தலைவர் சகோ.முஹம்மது ஷேக் முன்னிலை வகித்தார்கள்.

அதில் சகோ.முஹம்மது ஷரீப் அவர்கள் நிரந்தர விடுப்பில் தாயகம் செல்லவிருப்பதால் புதிய தலைவர் தேர்வு நடைபெற்றது. அக்கிளையின் புதிய தலைவராக செயற்குழு உறுப்பினர்களால் ஒரு மனதாக துனைத்தலைவராக செயல்பட்டு வந்த சகோ.செங்கோட்டை ஹாஜா அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்னர் சகோ.செங்கோட்டை ஹாஜா வகித்து வந்த துனைத்தலைவர் மற்றும் தாஃவா அணிச்செயலாளர் ஆகிய பொறுப்புகள் காலியானதை தொடர்ந்து அதற்க்கு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அதன் அடிப்படையில் துணைத்தலைவராக சகோ.கடையநல்லூர் ஷேக் உதுமான் அவர்களும் தாஃவா அணிசெயலாளராக சகோ.நெல்லை முஹம்மது ரபீக் அவர்களும் செயற்குழு உறுப்பினர்களால் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இறுதியாக புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு அபுதாபி மண்டல தலைமை நிர்வாகிகள் சகோ.முஹம்மது ஷேக், அப்துல் ஸலாம் மற்றும் முஹம்மது இஸ்மாயில் ஆகியோர் ஆலோசனை வழங்கினார்கள். இத்துடன் செயற்குழு நிறைவுற்றது. அல்லாஹ்விற்கே எல்லா புகழும்.