அபுதாபி ஐகாட் சிட்டி கிளை வாராந்திர சொற்பொழிவு நி்கழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டலத்தின் ஐகாட் சிட்டி கிளை மர்க்கஸான ETA 13 நம்பர் கேம்ப் பள்ளியில்  கிளை தலைவர் செங்கேட்டை ஹாஜா தலைமையில் வாரந்தோறும் வெள்ளிக் கிழமை மஃரிப் தொழுகைக்கு பிறகு மார்க்கச் சொற்பொழிவு நடைபெற்று வருகிறது.

அதை தொடர்ந்து கடந்த 26-02-10 அன்று தவ்ஹீத் ஜமாஅத் துபாய் மண்டல பொருளாளர் ஆடுதுறை மன்சூர் அவர்கள் அல்லாஹ்வின் கருனை என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்.

ஐகாட் கிளை ஏறப்பாடு செய்த இந்த நிகழ்ச்சியில் ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.