அபுதாபி ஐகாட் கிளை ரூபாய் 8 ஆயிரம் மருத்துவ உதவி

கர்நாடகாவைச் சேர்ந்த மாற்று மத சகோதரர் ஆல்வின் என்பவர் அபுதாபியில் பணிபுரிந்து வருகிறார். அவரின் மகள் ஆஷா என்ற பெண் குழந்தை இருதய நோயினால் பாதிக்கபட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அக்குழந்தைக்கு மருத்துவர்கள் உடனே இருதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறி அதற்கு சில லட்சம் செலவாகும் என தெரிவித்துள்ளனர்.

குறைந்த சம்பளம் வாங்கும்  அவரால் இவ்வளவு பெரிய தொகையை ஏற்பாடு செய்ய முடியவில்லை. அதனால்  உதவி கேட்டு  மருத்துவ சான்றிதலுடன் அபுதாபி ஐகாட் கிளையில் கோரிக்கை மனு அளித்தார், இதை பரிசீலனை செய்து அந்த குழந்தையின் மருத்துவ உதவிக்காக அபுதாபி TNTJ ஐகாட் கிளை சார்பாக ரூபாய் 8,000 வழங்கபட்டது.