அபுதாபி ஐகாட் கிளை மர்க்கஸில் இஸ்லாத்தை தழுவிய செல்வகுமார்

P1290064அபுதாபியில் பணி புரிந்து வரும் விழுப்புரம் மாவட்டம் உளுந்துர்பேட்டை பகுதியைச் சேர்ந்த சகோ செல்வக்குமார் என்பவர் கடந்த 19-02-10 அன்று வெள்ளிக் கிழமை ஐகாட் கிளை மர்க்கஸில்  தன்னுடைய இயற்க்கை மார்க்கமான இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்.

இவருக்கு கிளை தலைவர் செங்கோட்டை ஹாஜா அவர்கள் ஏகத்துவ கலிமாவை சொல்லி கொடுத்த பின்னர் அல்லாஹ்வின் கிருபையால் தன்னுடய பெயரை சலீம் என்று மாற்றி கொண்டார்.

மேலும் அவருக்கு சகோதரர் பீஜே அவர்கள் மொழிபெயர்த்த குர்ஆன் மற்றும் மார்க்க விளக்க புத்தகங்கள், சீடிக்கள் அன்பளிப்பாக வழங்கபட்டது.