அபுதாபி ஐகாட் கிளை சார்பாக நடைபெற்ற வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சிகள்

அல்லாஹ் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டலத்தில் ஐகாட் சிட்டி கிளையின் மர்க்கஸான ETA 13 நம்பர் கேம்ப் பள்ளியில்  வாரந்தோறும் மார்க்க சொற்பொழிவு நடைபெற்று வருகிறது.

04 (2)02 (6)03 (7)கடந்த ஜனவரி மாதத்தில் 01-01-10 அன்று தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டல செயலாளர் சகோ அப்துல் சலாம் அவர்கள் புதுவருடமா? மதுவருடமா? என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்.

அதைத் தொடர்ந்து 08-01-10 அன்று சகோ யூசுப் அலி அவர்கள் கோபம் உங்களை கட்டுபடுத்த வேண்டாம் என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்,

அதைத் தொடர்ந்து 15-01-10 அன்று அமீரக அழைப்பாளர் சகோ காஜா மைதீன் பிர்தவ்ஸி அவர்கள் இப்ராஹீம் நபி சமுதாயமும் இன்றய முஸ்லீம்களின் நிலையும் என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்,

அதைத் தொடர்ந்து 22-01-10 அன்று மேலப்பாளையம் சகோ உஸ்மான் சைத்தானை தெரிந்து கொள்ளுங்கள் என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்.

அதைத் தொடர்ந்து 29-01-10 அல் அய்ன் மண்டல துனை செயலாளர் சகோ செய்யத் அவர்கள் மறுமை வெற்றி யாருக்கு என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்.

ஐகாட் கிளை ஏற்பாடு செய்த இந்த அனைத்து நிகழ்ச்சிகளிலும் ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.