அபுதாபி ஐகாட் கிளையில் நடைபெற்ற தர்பியா முகாம்

0401 (2)07 (1)அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி ஐகாட் கிளையில் கடந்த 15-01-10 வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி முதல் மதியம் 12 மணி வரை நிர்வாகிகள் மற்றும் தாயிக்களுக்கான தர்பியா பயிற்சி வகுப்பு ஐகாட் கிளை மர்க்கஸில் கிளை தலைவர் செங்கோட்டை ஹாஜா தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் அபுதாபி மண்டல துணை தலைவர் சகோ இஸ்மாயில் அவர்கள் தர்பியா ஏன்? என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

அதை தொடர்ந்து மண்டலச்செயலாளர் சகோ அப்துல் சலாம் அவர்கள் தர்பியா எதற்க்கு? என்ற தலைப்பிலும் சுருக்கமாக எடுத்து கூறினார்.

அதை தொடர்ந்து அபுதாபி மண்டல தலைவர் சகோ முஹம்மது ஷேக் அவர்கள் இறையச்சம் என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்.

இறுதியாக அமீரக ஒருங்கிணைப்பாளர் சகோ ஹாமின் இபுறாஹீம் அவர்கள் தனிமனித ஒழுக்கம் என்ற தலைப்பில் சிறப்புரை நிகழத்தினார்.

அவர் தனது உரையில் நிர்வாகிகளாக இருப்பவர்களிடமும் அழைப்பாளர்களிடமும் இருக்க வேண்டிய தனி மனித ஒழுக்கங்களினை குர்ஆன் மற்றும் ஹதீஸ் அடிப்படையில் மிகத்தெளிவாக எடுத்துரைத்தார்கள்.

நிகழ்ச்சி ஏற்பாட்டை ஐகாட் கிளை தலைவர் செங்கோட்டை ஹாஜா தலைமையில் நிர்வாகிகளும் உறப்பினர்களும் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். அல்ஹம்துலில்லாஹ்