அபுதாபி ஐகாட் கிளையில் நடைபெற்ற பேச்சு பயிர்ச்சி வகுப்பு

P1180003

P1180003Picture 016அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டலத்தில் மர்க்கஸ் பயான், வெள்ளி கிழமையில் ஜீம்மா மேடை, கேம்ப் பயான், இருப்பிடம் சென்று சத்திய பிரச்சாரம் செய்வது, முஸ்லிம் அல்லாத மக்களுக்கு கேள்வி பதில் நிகழ்ச்சி, முஸ்லிம் மக்களுக்கு இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம், எழுத்து ஆற்றலை ஊக்கபடுத்துவதற்க்காக கட்டுரை போட்டி, என பல்வேறு வழிகளில் தவ்ஹீத் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. அல்ஹம்துலில்லாஹ்!

சத்திய இஸ்லாத்தை கற்றறிந்த மார்க்க அறிஞர்கள் மட்டுமின்றி, அனைத்து தவ்ஹீத் சகோதரர்களும் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டலம் சார்பாக பேச்சுப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன் தொடர்ச்சியாக அபுதாபி ஐகாட் கிளையில் சனி கிழமை தோறும் கிளை தலைவர் செங்கோட்டை ஹாஜா தலைமையில் பேச்சு பயிற்ச்சி வகுப்பு நடைபெற்று வருகிறது, இதில் மிக ஆர்வத்துடன் ஆறு சகோதரர்கள் பயின்று வருகின்றனர், இவர்களுக்கு அபுதாபி மண்டலச் செயலாளர் சகோ அப்துல் சலாம் அவர்களும், மண்டல தாவா பொறுப்பாளர் முஹம்மது கலில் அவர்களும் பயிற்ச்சி அளித்து வருகின்றனர்.

சமிபத்தில்தான் இக்கிளையிலிருந்து பேச்சு பயிற்ச்சி மூலம் ஆறு சகோதரர்கள் தேர்ச்சி பெற்று அபுதாபி மண்டலம் முழுவதும் பிரச்சரம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.