அபுதாபி ஐகாட் கிளையில் நடைபெற்ற இஸ்லாமிய கேள்வி பதில் போட்டி!

IMG_0381IMG_0369IMG_0373அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டல ஐகாட் கிளையில் மக்கள் தங்கள் அறிவு திறனை வெளிப்படுத்த ஓர் அரிய வாய்ப்பாக கடந்த 28.01.10 அன்று அபுதாபி மண்டல துணை செயலாளர் ஷாகுல் அவர்கள் முன்னிலையில், ஐகாட் கிளை தலைவர் செங்கோட்டை ஹாஜா தலைமையில் வினாடி வினா நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியை சகோ யூசுப் அலி அவர்கள் தொகுத்து வழங்கினார்கள் A,B,C,என மூன்று அணிகள் பிரிக்கபட்டது, இலேசான சுற்று, உங்கள் விருப்பம், சரியா? தவறா?, பார்வையாளர்கள் சுற்று, என நான்கு சுற்றுகளாக நடத்தபட்டது, இதில் மார்க்கம், சமுதாயம் மற்றும் விஞ்ஞான சம்பந்தமான கேள்விகள் கேட்க்கபட்டது, போட்டியில் கலந்து கொண்ட அனைத்து சகோதரர்களும் அறிவுபூர்வாமாக பதில் கூறினார்கள். ஆ அணியினர் முதல் பரிசும், c அணியினர் இரண்டவது பரிசும், B அணியினர் மூன்றவது பரிசும் பெற்றனர். பார்வையாளர்கள் சுற்றில் கலந்து கொண்டு சரியான பதிலை சொன்ன இரண்டு நபர்களுக்கும் பரிசுகள் வழங்கபட்டது, பரிசுகளை மண்டல மற்றும் கிளை நிர்வாகிகள் வழங்கினார்கள். பார்வையாளரில் ஒருவர் கருத்து கூறுகையில் இதுபோன்று நிகழச்சி அடிக்கடி நடத்தப் படவேண்டும் இதன் மூலம் நாங்கள் தெரியாத ஏராளமான செய்திகளை தெரிந்து கொண்டோம் என கூறினார்.

நிகழ்ச்சி ஏற்ப்பாட்டை செங்கோட்டை ஹாஜா தலைமையில் அனைத்து நிர்வாகிகளும் சிறப்பாக ஏற்ப்பாடு செய்திருந்தனர்.