அபுதாபி ஐகாட் கிளையில் ஜுலை 4 மாநாடு ஆலோசனைக் கூட்டம்

தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டலம் ஐகாட் கிளையில் கடந்த 10-04-10 அன்று கிளை தலைவர் செங்கோட்டை ஹாஜா தலைமையில் ஜீலை 4ல் மாநாடு சம்பந்தாமான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இக் கூட்டத்திற்க்கு மண்டல செயலாளர் அப்துஸ் சலாம் அவர்கள் முன்னிலை வகித்தார், ஐகாட், முஸ்ஸஃபா, மற்றும் செனைய்யா கிளை நிர்வாகிகள் கலந்து கொண்ட இக் கூட்டத்தில் மாநாடு சம்பந்தமாக எந்த வகையில் பிரச்சாரம் மேற்கொள்வது என ஆலோசிக்கபட்டது.

முதல் கட்டமாக அனைத்து பகுதிகளிளும் மக்கள் இருப்பிடம் சென்று மாநாட்டின் அவசரத்தையும் அவசியத்தையும் எடுத்து சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ரங்கநாத் மிஸரா பரிந்துரையின் முக்கிய அம்சங்களை, தமிழ் மலையாளம், உறுது, மொழிகளில் துண்டு பிரசுரம் வினியோகம் செய்வதெனவும் முடிவு செய்யப்பட்டது.

மேலும் இப் பகுதிகளில் மாநாடு சம்பந்தாமான பணிகளை வீரியபடுத்த குழுக்களாக பிரிந்து செயல்படுவதெனவும், குழுக்களின் பொருப்பாளர்களாக தஞ்சை ஹீசேன், மற்றும் புளியங்குடி முஹம்மது கனி ஆகியோரை நியமிப்பது எனவும் முடிவு செய்யபட்டது