தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டலத்தில் ஐகாட் சிட்டி கிளையின் மர்க்கஸான ETA 13 நம்பர் கேம்ப் பள்ளியில் கிளை தலைவர் செங்கேட்டை ஹாஜா தலைமையில் வாரந்தோறும் வெள்ளிக் கிழமை மஃரிப் தொழுகைக்கு பிறகு மார்க்கச் சொற்பொழிவு நடைபெற்று வருகிறது.
இதனைத் தொடர்ந்து கடந்த 04-02-10 அன்று மேலப்பாளையம் ஜமால் அவர்கள் கொள்கையில் உறுதி என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார். மேலும் கடந்த 11-02-10 அன்று புளியங்குடி முஹம்மது கனி அவர்கள் தவ்ஹீத் ஜமாஅத் சாதிக்கவேண்டியது என்ன? என்ற தலைப்பில் என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்.