அபுதாபியில் விளையாட்டு போட்டி மற்றும் மார்க்க சொற்பொழிவு

கடந்த 17/02/2011 அன்று அபுதாபி மண்டல TNTJ சார்பாக அபுதாபி மண்டல நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் செயல்வீரர்களுக்கான விளையாட்டுப்போட்டி நடத்தப்பட்டது. இதில் அபுதாபி மண்டலத்தின் அனைத்து கிளைகளைச் சார்ந்த நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் கலந்துக் கொண்டனர். இதில் நீலம்தாண்டுதல் ஓட்டபந்தயம் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டது.

மிக உற்சாகத்துடன் ஏகத்துவ சகோதரர்கள் சகோதர வாஞ்சையுடன் இப்போட்டிக்களில் கலந்துக் கொண்டனர்.

காலை 8 மணிக்கு துவங்கிய விளையாட்டுப்போட்டிகள் லுஹர்த் தொழுகை நேரம் வரை நடைபெற்றது. மதிய உணவினைத் தொடர்ந்து பரிசுகள் வழங்கப்பட்டன! பரிசளிப்பின் போது மார்க்க அறிவுரைகளும் வழங்கப்பட்டன.