அபுதாபியில் நடைபெற்ற ரமளான் மாத சிறப்பு சொற்பொழிவில் இஸ்லாத்தை ஏற்ற பாலாஜி!

அபுதாபியில் நடைபெற்ற ரமளான் மாத சிறப்பு சொற்பொழிவில் இஸ்லாத்தை ஏற்ற பாலாஜி!அபுதாபியில் நடைபெற்ற ரமளான் மாத சிறப்பு சொற்பொழிவில் இஸ்லாத்தை ஏற்ற பாலாஜி!அபுதாபியில் நடைபெற்ற ரமளான் மாத சிறப்பு சொற்பொழிவில் இஸ்லாத்தை ஏற்ற பாலாஜி!அபுதாபியில் நடைபெற்ற ரமளான் மாத சிறப்பு சொற்பொழிவில் இஸ்லாத்தை ஏற்ற பாலாஜி!அபுதாபி TNTJ முஸ்ஸஃபா கிளை கிளின்கோ ‘C’ கேம்ப் பள்ளியில் வைத்து கடந்த 20.08.09 வியழான் அன்று மாபெரும் ரமாலான் சிறப்பு மார்க்கச் சொற்பொழிவு ஏற்பாடு செய்யப்பட்டது

இந்த நிகழ்ச்சிக்கு அபுதாபி மண்டல தலைவர் முஹம்மது ஷேக் அவர்கள் தலைமை தாங்கினார், அதை தொடர்ந்து தாயகத்திலிருந்து வருகை தந்துள்ள TNTJ மாநில பேச்சாளர் மௌலவி அப்துல் கரிம் அவர்கள் அருட்கொடைகளை அள்ளித்தரும் ரமலான் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்,

இந்த நிகழ்ச்சி சரியாக இரவு 10 மணிக்கு ஆரம்பிக்கபட்டது இந்த நேரம் மக்கள் தங்கள் வேலைகளை முடித்துவிட்டு ஓய்வு எடுக்கும் நேரமென்றாலும் அதை பொருட்படுத்தாமல் முஸாஃபா, அபுதாபி, ஐகாட் பகுதிலிருந்து சுமார் 175-க்கு மேற்பட்ட சகோதரர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். நிகழ்ச்சி ஏற்பாட்டை முஸ்ஸஃபா கிளை தலைவர் முஹம்மது கனி தலைமையில் அனைத்து நிர்வாகிகளும் சிறப்பாக ஏற்பாடு செய்திpருந்தனர். நிகழ்ச்சியின் இறுதியில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த பாலாஜி என்ற சகோதரர் தூய இஸ்லாத்தை அறிந்து அதனை ஏற்றுக் கொள்ள முன்வந்து தன்னுடைய வாழ்வியல் நெறியாக இஸ்லாத்தை ஏற்று கொண்டார்,

அவருக்கு மௌலவி அப்துல் கரிம் அவர்கள் ஷஹாதா கலிமா சொல்லிக் கொடுத்து அவர் தன் பெயரை அப்துர் ரஹ்மான் என்று மாற்றி கொண்டார் என்பது குறிப்பிடதக்கது. அல்ஹம்துலில்லாஹ்