அபுதாபி TNTJ சார்பாக மேலப்பாளையத்தில் பள்ளிவாசல் கட்ட ரூபாய் 2 லட்சம்!

MPM.3MPM.2அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 11-12-09 அன்று மேலப்பாளையம் சகோதரர்களின் ஆலோசனை கூட்டம் கிளின்கோ சி கேம்ப் அறை என் 116-ல் அபுதாபி மண்டல தலைவர் முஹம்மது ஷேக் அவர்கள், மற்றும் அல் இர்ஷாத் வளர்ச்சிக்குழு அமீரக பொறுப்பாளர் சகோ சாந்து உமர் அவர்களும், அமீரக நெல்லை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சகோ ஹாஜா மைதீன் பிர்தவ்ஸி அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்க்கு அபுதாபி மேலப்பாளையம் TNTJ தலைவர் சலீம் அவர்கள் தலைமை தாங்கினார், கடந்த மாதம் ஒருங்கிணைப்பு கூட்டத்தில் புதிதாக மேலப்பாளையத்தில் பள்ளிக்கு நிலம் வாங்கியதுக்கு எவ்வாறு பொருளாதார பங்களிப்பு செய்வது என்பது விவாதிக்கப்பட்டது அதன் அடிப்படையில் நிர்வாகிகளும் மற்றும் உறுப்பினர்களும் பம்பரம் போல் சுழன்று பள்ளி சம்பந்தமான விபரங்களையும் அதன் அவசியத்தையும் மக்களுக்கு எடுத்து கூறி முதல் கட்டமாக இந்திய ருபாய் இரண்டு லட்சத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டல தலைவர் முஹம்மது ஷேக் அவர்களிடம், அபுதாபி மேலப்பாளையம் TNTJ தலைவர் சலீம் அவர்கள் வழங்கினார்கள். மேலும் மேலப்பாளையம் கொள்கை வளர்ச்சிக்கு எவ்வாறு நமது பங்களிப்பு இருக்கவேண்டும் என்பதை விவாதிக்கபட்டது மாதந் தோறும் மேலப்பாளையம் சகோதரர்களிடம் சந்தா வசூல் செய்து சமுதாய நலபணிக்கு செலவு செய்யவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இறுதியாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில மேலாண்மைக் குழு தலைவர் ஷம்சுல்லுஹா அவர்கள் தாயத்திலிருந்து தொலைபேசி மூலம் உரை நிகழ்த்தினார்.

பள்ளி சம்பந்தமான விபரங்களை விரிவாக எடுத்து கூறி பள்ளிக்காக உதவி செய்த அனைத்து சகோதரர்களுக்கும் அல்லாஹ் மறுமையில் மகத்தான கூலி வழங்குவானக என பிரர்த்தனை செய்து நிறைவு செய்தார்.