அபுதாபியில் நடைபெற்ற மேலப்பாளையம் TNTJ ஒருங்கிணைப்பு கூட்டம்

DSC00666 (1)

DSC00664 (1)DSC00661 (1)அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 30-10-09 அன்று மேலப்பாளையம் சகோதரர்களின் ஒருங்கிணைப்பு கூட்டம் கிளின்கோ சி கேம்ப் அறை என் 116-ல் அபுதாபி மண்டல தலைவர் முஹம்மது ஷேக் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்திர்க்கு அமீரக நெல்லை மாவட்ட செயாலளர் சகோ சாந்து உமர் அவர்களும், மற்றும் சகோ காஜா மைதீன் பிர்தவ்ஸி அவர்களும் முன்னிலை வகித்தார்கள்.

இக்கூட்டத்தில் பேசிய அபதாபி மண்டல தலைவர் முஹம்மது ஷேக் அவர்கள் இந்த ஒருங்கிணைப்பு எதற்க்காக என்பதை தெளிவாக விளக்கி கூறினார், அதை தொடர்ந்து அமீரக நெல்லை மாவட்ட செயலாளர் சாந்து உமர் அவர்கள் மேலப்பாளையத்தில் புதிதாக வாங்கிவுள்ள மஸ்ஜித் ஸலாம் பள்ளி சம்பந்தமான விபரங்களையும் மற்றும் நேரில் பார்த்த விஷயங்களையும் அதன் நிதி நெருக்கடியும் விளக்கி பேசினார். மேலும் பள்ளிக்காக நிதி திரட்டுவது பற்றியும், மேற்கொண்டு தாயகத்தில் கொள்கை வளர்ச்சிக்கு எவ்வாறு பங்களிப்பு செய்வது பற்றி விவாதிக்கபட்டது

இறுதியாக அபுதாபி வாழ் மேலப்பாளையம் TNTJ சகோதரர்களின் ஒருங்கிணைப்புகுழு நிர்வாகிகளாக கீழ்காணும் சகோதரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்..

(தலைவர் : M . சலீம் 050 5803460) (து தலைவர் மீரான் 055 3278901)

(செயாலளர் : அன்சாரி 055 4908188) (பெருளாலர் பஷிர் 050 1218584)

(து செயாலளர் : உஸ்மான் 050 9573637)

(து செயாலளர் : K.B. முஹம்மது ஷேக் 050 3263546)