அபுதாபியில் நடைபெற்ற மாபெரும் தர்பியா முகாம்!

13112009(011)13112009(009)13112009(007)13112009(005)தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்ற பேரியக்கம், தமிழகத்தில் மட்டுமின்றி உலக அளவில் கிளைகள் மற்றும் உறுப்பினர்களை தன்னகத்தே கொண்டுள்ள மாபெரும் இயக்கமாக திகழ்கின்றது அல்ஹம்துலில்லாஹ்.

இந்த இயக்கம் தவ்ஹீத்வாதிகளிடம் மட்டுமின்றி தமிழ்பேசும் பெருவாரியான முஸ்லீம் மக்களின் ஆதரவையும், நன் மதிப்பையும், நாணயத்தையும் பெற்றுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்

இப்படி சிறப்பு தகுதிகளை பெற்றுள்ள இந்த ஜமாஅத்தை நிர்வகிக்ககூடிய நிர்வாகிகள் மற்றும் இந்த ஜமாஅத்தின் அடிப்படை கொள்கையான குர்ஆன் ஹதீஸை மக்களிடம் எடுத்துச் சொல்லும் தாயிக்களும் பண்பாளர்களாக, தனி மனித ஒழுக்கம் பேனக்கூடியவர்களாக, மார்க்கம் மற்றும் சமுதாய பணிகளில் மக்களுக்கு சிறந்த முன் மாதிரியாய் திகழவேண்டும் என்ற நன்நோக்கத்தில் அவ்வப்போது தர்பியா என்கிற நல்லொழுக்க பயிற்சி முகாமை இந்த ஜமாஅத் தமிழகத்தில் மட்டுமின்றி உலகில் பல 13112009(003)13112009(002)பகுதிகளிலும் நடத்தி வருகின்றது.

அதனடிப்படையில் அபுதாபி தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் அதன் கிளைகளான முஸாபாஃ, ஐகாட்சிட்டியும் இனைந்து அபுதாபி தவ்ஹீத் ஜமாஅத் மர்க்கஸில் தர்பியா முகாம் ஒன்றை நடத்தியது.

13.11.2009 வெள்ளிக்கிழமை காலை மிகச்சரியாக 8:30க்கு அபுதாபி தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் முஹம்மது ஷேக் அவர்களின் தலைமையுரையுடன் நிகழ்ச்சி ஆரம்பமானது.

இந்த நிகழ்ச்சியை மூன்று பிரிவுகளாக பிரித்து நடத்துவது என்று அறிவிப்பு செய்யப்பட்டு அதனடிப்படையில் நிகழ்ச்சி நடைபெற்றது. முதலாவதாக ‘என்னை கவர்ந்த ஜமாஅத்’ என்ற தலைப்பில் தமிழகத்தில் பல முஸ்லீம் அமைப்புகள் இருக்கும்போது குறிப்பாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தை தேர்ந்தெடுத்ததன் நோக்கம் என்ன? இந்த ஜமாஅத்தின் கொள்கையால் ஈர்க்கப்பட்டா? அல்லது சமுதாய பணியில் சிறந்து விளங்கும் காரணத்திலா? என்ற கேள்விக்கு வந்திருந்த சகோதரர்கள் அவர்களின் கடந்த கால நிகழ்வுகளை நினைவு கூர்ந்து இந்த ஜமாஅத்தில் தங்களை இனைத்துக்கொண்டதற்கான தக்க காரண காரணங்களை விளக்கினார்கள்.

அதில் ஓர் சகோதரர் குறிப்பிடும்போது ‘இந்த ஜமாஅத்துடன் கடந்த காலங்களில் ஒன்றிணைந்து செயல்பட்ட எத்தனையோ சகோதரர்கள் இதிலிருந்து வெளியேறினார்கள் பிரிந்து சென்ற அவர்களில் சிலர் இந்த ஜமாஅத்திற்கு எதிராக எதிர் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர் ஆனால் அவர்களில் சிலர் இன்று முகவரியற்றுபோனதே இறையருளால் இந்த ஜமாஅத் மட்டும்தான் சத்தியத்திலிருக்கின்றது என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம்’

என்ற கருத்துப்பட கூறினார்.

மேலும் கடந்த காலத்தில் கடவுள் மறுப்பு கொள்கையிலிருந்தவர், இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாய் ஏற்றுக்கொண்ட பிற மத சகோதரர் என அவர்கள் இந்த ஜமாத்தை தேர்வு செய்ததற்கான முக்கிய காரணங்களை விளக்கினார்கள்.

இதனை தொடந்து காலை 10.30மணிக்கு UAE ஒருங்கிணைப்பாளர் சகோதரர் ஹாமீன் இபுராஹீம் அவர்கள் உலக இஸ்லாமிய இயக்கங்களின் பின்னனி மற்றும் தமிழக இஸ்லாமிய இயக்கங்களின் வரலாறு போன்றவற்றை மிகத் தெளிவாக விளக்கி கூறினார்கள்.

மற்ற இயக்கங்களிலிருந்து TNTJ எப்படி வேறுபட்டிருக்கின்றது என்ற செய்தி முகாமில் கலந்து கொண்ட புதிய சகேதரர்களுக்கு பிரயோஜனமாயிருந்தது. நேரமின்மையின் காரணத்தினால் கேள்வி பதில் நிகழ்ச்சி நடத்த முடியாமல் போனது.

மதியம் 1.30 மணிக்கு ஜூம்ஆ பேருரையுடன் மர்க்கஸில் தொழுகை நடத்தப்பட்டது.; அழைப்பு பணி செய்பவர்களிடம் இருக்க வேண்டிய மற்றும் இருக்கக் கூடாத பண்புகள் குறித்து ஜூம்ஆ உரை நிகழ்த்தப்பட்டது. மதிய உணவிற்கு பிறகு தர்பியா முகாம் நிறைவுபெற்றது (அல்ஹம்துலில்லாஹ்)