அபுதாபியில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் புதிய நிர்வாகிகள் தேர்வு

2210200900722102009003221020090022210200900122.10.2009 வியாழன் இரவு அபுதாபி தவ்ஹீத் ஜமாஅத்தின் பொதுக்குழு மற்றும் நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. இப்பொதுக்குழுவிற்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் TNTJ ஒருங்கிணைப்பாளர் சகோதரர் ஹாமின் இபுராஹீம் தலைமை தாங்கினார்கள்.

முதலாவதாக அபுதாபி தவ்ஹீத் ஜமாஅத்தின் பொருளாளர் சகோதரர் சுல்தான் ஸலாஹுத்தீன் அவர்கள் கடந்த ஒர் வருடத்திற்கான (2008-2009) வரவு செலவு கணக்குகளை சமர்பித்தார்கள்.

அதனை தொடர்ந்து அபுதாபி தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைவர் சகோதரர் முஹம்மதுஷேக் கடந்த ஓரு வருடமாய் ஜமாஅத் செய்துவந்த மார்க்கம் மற்றும் சமுதாய பணிகளின் செயல் அறிக்கையினை பொதுக்குழுவில் சமர்ப்பித்தார்கள்.

அந்த அறிக்கையில் மிக முக்கிய செய்தியாக அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த ஓர் வருடத்தில் மட்டும் இஸ்லாத்தை தங்களின் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்ட பிற மத சகோதரர்கள் ஒன்பது நபர்கள் என்ற செய்தி குறிப்பிடத்தக்கது.

இதனை தொடந்து கடந்த ஒரு வருடமாய் செயல்பட்டு வந்த பழைய நிர்வாகம் பூர்த்தியானதைத் தொடந்து புதிய நிர்வாகத் தேர்வு நடைபெற்றது.இத்தேர்வுக்கு தேர்தல் ஆணையராக அமீரக வுNவுது ஒருங்கிணைப்பாளர் சகோதரர் ஹாமீன் இபுராஹீம் செயல்பட்டார்கள்.

வரும் இரண்டு ஆண்டுகளுக்கான அபுதாபி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் நிர்வாகிகளாக கீழ்காணும் சகோதரர்கள் தேர்ந்து எடுக்கப்பட்டனர்.

தலைவர் முஹம்மதுஷேக் (050 2629541 நாகர்கோவில்)
துணை தலைவர் இஸ்மாயில் (050 3261361 சென்னை)
மண்டல செயலாளர் அப்துல்ஸலாம் (055 8718526 கடையநல்லூர்)
மண்டல துணை செயலாளர் ஷாகுல்(அப்துல்ஹமீது) (055 9385536 கடையநல்லூர்)
பொருளாளர் சுல்தான்ஸலாகுதீன் (050 5815302 கடலூர்)