அபுதாபியில் நடைபெற்ற செயற்குழு கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டல செயர்குழுக் கூட்டம் கடந்த 12.03.2010 அபுதாபி மர்க்கஸில்  மண்டலத் துனைத்தலைவர் சகோ.இஸ்மாயில் அவர்கள் தலமையில் நடைபெற்றது,

செயல்பாட்டு அறிக்கையை மண்டல துனை செயலாளர் சகோ.கடையநல்லூர் ஷாகுல் அவர்கள் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுத்த பின்னர் இந்த ஜமாஅத் செய்து வந்தள்ள அரும்பணிகளை பட்டியலிட்டு வாசித்தார்.

இதனை தொடர்ந்து கலந்து கொண்ட அனைத்து நிர்வாகிகளின் அறிமுகம் நடைபெற்றது.

பின்னர் ஈரோட்டில் TNTJ தலைமை ஏற்பாட்டில் நடத்தப்பட்ட செயர்குழு கூட்டத்தின் தீர்மாணங்களை மண்டல செயலாளர் சகோ. அப்துஸ் சலாம் அவர்களால் வாசித்து காண்பிக்கபட்டது.

மேலும் இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் ஜூலை 4 – ல் சென்னை யில் நடைபெறவிருக்கும் பேரணி & மாநாடு பற்றி செயர்குழு உறுப்பினர்களிடையே அமிரக ஒருங்கிணைப்பாளர் சகோ.ஹாமின் இபுறாகீம் அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.

பேரணி & மாநாடு சம்பந்தமாக உறுப்பினர்களால் கீழ் கன்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது

ஜமாஅத் மூலம் நடைபெறும் அனைத்து பயான்கள் ஜும்ஆ உரைகளில் மாநாடு குறித்து விளக்குவது.

மாநாடு சம்பந்தமான உரைகள் அடங்கிய சி.டி. மற்றும் பிரசுரங்கள் தமிழ் அல்லாத பிற மொழிகளிலும் வெளியிட வேண்டும்.

இந்த மாநாட்டிற்காக அபுதாபி மண்டலத்தில் இருந்து இந்திய ரூபாய் ஐந்து லட்சம் வரை தலைமைக்கு அனுப்பி உதவுவது என தீர்மானிக்கப்பட்டது.

மாநாடு வசூல் மற்றும் இதன் அவசியத்தை விளக்கிச் சொல்ல தேர்ந்தெடுக்கப்பட்ட குழுவில் அனைத்து செயலாளர்களும் செயற்குழு உறுப்பினர்கள் இருப்பார்கள் அதற்கு சகோ.அப்துஸ் சலாம் அவர்கள் தலைவராக இருப்பார்கள் எனவும் தீர்மானிக்கப்பட்டது.

இறுதியில் சகோ.ஹாமீன் இபுறாகிம் அவர்கள் ஜும்மா உரையுடன் செயர்குழுக் கூட்டம் இனிதே நிறைவடைந்தது.