அபுதாபியில் நடைபெற்ற கேள்வி பதில் நிகழ்ச்சி

01 (4)02 (4)03 (3)05 (1)திரை கடல் ஓடி திரவியம் தேடு என்பது பழ மொழி! ஆனால் நம் கொள்கை சகோதரர்கள் பொருளீட்டுவதற்க்காக கடல் தாண்டி போனாலும் நாம் ஏற்ற சத்திய இஸ்லாத்தை நாம் அறிந்ததோடு மட்டுமல்லாமல் அனைத்து மக்களும் நேர் வழியில் நடக்க வேண்டும் என்கின்ற உயரிய நோக்கத்தில் அழைப்பு பணி செய்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாய் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டலத்தில் பிரதி வியாழன் தோறும் இரவு 9மனி முதல் 10மனி வரை அபுதாபி எலக்ட்ரா ரோட்டில் அமைந்துள்ள அல் இபுராஹீமீ ரெஸ்டரான்ட் பில்டிங் 13-வது மாடி யில் 1303-வது ஃபிளாட்டில் வைத்து வாரந்தோறும் பல்வேறு தலைப்புகளில் மார்க்க சொற்பொழிவு நடைபெற்று வருகிறது.

கடந்த 04-02-10 வியழாக்கிழமை அன்று தாயகத்திலிருந்து ஆன்லைன் மூலம் கேள்வி பதில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில மேலாண்மை குழு உறுப்பினர் சகோதரர் பிஜே அவர்கள் பங்கு பெறுவதாக அறிவித்திருந்த இந்நிகழ்ச்சியில் சகோதரர் அவர்கள் தவிர்க்க முடியாத காரணத்தால் பங்கு பெற முடியவில்லை, அதற்கு பதிலாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில துணைத் தலைவர் சகோ கோவை ரஹ்மத்துல்லாஹ் பங்கு பெற்று மக்கள் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் குர்ஆன் ஹதிஸ் மூலம் பதில் கூறினார்.

சமீபத்தில் புதிதாக இஸ்லாத்தை ஏற்ற சித்திக் என்ற சகோதரர் நான் ஏற்ற இந்த இன்பத்தை, இஸ்லாம் எனும் பயனுள்ள பொக்கிஷத்தை என் உறவினர்கள்,என்னை சுற்றியுள்ள சக நண்பர்களிடம்  எப்படி எடுத்து சொல்வது என்று கேட்ட கேள்விக்கு பதில் சொன்ன விதம் அவரின் மன தைரியத்தை அதிகமாக்கும் வகையில் அமைந்திருந்தது. அல்ஹம்துலில்லாஹ்……..

இந்த நிகழ்ச்சியில் ஏராள‌மான சகோத‌ரர்கள் கேள்வி கேட்க டோக்கன் வாங்கியிருந்தனர் ஆனால் மக்களின் கேள்விகள் அதிகமாக இருந்ததால் ஏற்பாடு செய்த நேரம் முடிந்தும் மேலும் அரை மணி நேரம் நீட்டிக்கப்பட்டு நிகழச்சி நிறைவு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராள‌மான சகோரர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர், நிகழ்ச்சி ஏற்பாட்டை அபுதாபி மண்டல நிர்வாகிகள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.