அபுதாபியில் நடைபெற்ற கேம்ப் தஃவா

photo-4photoஅல்லாஹ்வின் மாபெரும் அருளினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டலத்தின் சார்பாக அபுதாபி மண்டலத்திற்க்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் வசிக்கும் தமிழ் சகோதரர்களை நேரில் போய் சந்தித்து அழைப்பு பணி செய்யப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாய் அபுதாபி துறைமுகத்தில் வேலைபார்த்து வரும் சகோதரர்கள் வசிக்கும் கேம்பில் நேரில் சென்று 01/01/2010 அன்று அழைப்பு பணி செய்யப்பட்டது.

இதில் அபுதாபி மண்டல தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் சகோ.முஹம்மது ஷேக் அவர்கள் குர்ஆன் ஹதீஸை மட்டும் பின்பற்றுவதின் அவசியம் குறித்தும், நன்மையை ஏவி தீமையை தடுப்பதின் அவசியம் குறித்தும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் –ன் பணிகள் குறித்தும் விளக்கினார்.

அதன் பின்னர் அந்த கேம்பில் வசிக்கும் முஸ்லீமல்லாத சகோதரர்களுக்கும் சத்திய மார்க்கத்தை எடுத்துச் செல்வது குறித்தும் ஆலோசனைக் நடைபெற்றது. இறுதியில் அரியலூர் சகோ. அப்துஸ்ஸமது அவர்கள் கேம்ப் பொறுப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு பிரதி வாரம் தோறும் அங்கு தாஃவா பணியினை மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டது. எல்லா புகழும் இறைவனுக்கே….