அபுதாபியில் நடைபெற்ற காதலர் தின எதிர்ப்பு பிரச்சாரம்

Image138Image133Image134தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டலத்தில் பிரதி வியாழன் தோறும் இரவு 9 மணி முதல் 10 மணி வரை அபுதாபி எலக்ட்ரா ரோட்டில் அமைந்துள்ள அல் இபுராஹீமீ ரெஸ்டரான்ட் பில்டிங் 13-வது மாடியில் 1303-வது ஃபிளாட்டில் வைத்து வாரந்தோறும் பல்வேறு தலைப்புகளில் மார்க்கச் சொற்பொழிவு நடைபெற்று வருகிறது.

கடந்த 18-02-10 அன்று வியழாக் கிழமை மண்டல துனை தலைவர் சகோ இஸ்மாயில் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

காதலர்கள் தினமா? கழிசடைகள் தினமா? என்ற தலைப்பில் சகோ மும்பை சிராஜ் அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார். விபச்சாரத்திர்க்கு துனை போன ஒரு அயோக்கியன் இறந்து போன தினத்தை,காதலர் தினம் என்று,நான்கு சுவருக்குள் நடக்கும் சம்பவத்தை, நடு ரோட்டில் அம்பலபடுத்தும் சில கழிசடைகளுக்கு, அரசாங்கமும், காவல்துறையும், இந்த விபச்சாரத்திர்க்கு பாதுகாப்பு அளிக்கின்றனர்.

சமீபத்தில் தொலைகாட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த மாநகர காவர்துறை ஆனையர் காதலர்களை தொந்தரவு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்கின்றார்.

இவர்கள் தான் எய்ட்ஸ் விழிப்புனர்வு தினம் என்றெல்லாம் கொண்டாடுகின்றனர். ஆனால் பரவி வரும் எய்ட்ஸுக்கான வழியை வேழி போட்டு காத்துக் கிடக்கின்றனர் இவர்களின் நடவடிக்கையை பார்த்தால் வேடிக்கையாகத்தான் இருக்கின்றது.

அதனால் தான் ஒரு ஆணும், பெண்ணும் தனித்திருப்பதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை என்று கூறி, எதனால் இந்த கழிசடைகளுக்கு காதல் ஏற்படுகின்றது என்பதை நிகழும் சம்பவங்களை சுட்டி காட்டி நிறைவு செய்தார்.

அபுதாபி மண்டலம் ஏற்ப்பாடு செய்த இந்த நிகழ்ச்சியில் ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.