அபுதாபியில் நடைபெற்ற அமீரக வாழ் கடையநல்லூர் சகோதரர்களின் ஆலோசனைக் கூட்டம்

அமீரக வாழ் கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாஅத்தின்  ஆலோசனைக் கூட்டம் அபுதாபி கிளின்கோ “C” கேம்பில் கடந்த வெள்ளிக்கிழமை (19.02.2010) அன்று அமீரக கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாஅத் செயலாளர் சகோ.ஷாகுல் தலைமையில் நடைபெற்றது.

அமீரக கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் சகோ.முஹம்மது அலி , பொருளாளர் சகோ.முஹம்மது இஸ்ஹாக் ஆகியோர் விடுமுறையில் ஊர் சென்றுள்ளதால் இக்கூட்டம் கூட்டப்பட்டு தஃவா பணியை மேலும் அதிகப்படுத்துவது பற்றி ஆலோசிக்கபட்டது. அதன் அடிப்படையில் கீழ்காணும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கடையநல்லுரில் சமுதாய வன்கொடுமையான “வட்டி & வரதட்சனை” க்கெதிரான ஒரு மாபெரும் விழிப்புணர்வு பேரணி ஊரில் நடத்தப்பட வேண்டும் .

ஒழுக்கச் சீர்கேட்டிற்கெதிராக ”ஒழுக்கச் சீர்கேட்டிற்கு யார் காரணம்” என்ற தலைப்பில் ஒரு மாபெரும் கட்டுரைப்போட்டி நமது பெண்கள் மத்தியில் நடத்தப்பட வேண்டும்.

அமீரகம் போன்ற வளைகுடா பகுதிகளில் சந்தா தாரர்களை அதிகப்படுத்த முயற்சிகள் செய்ய வேண்டும்.

நிகழ்ச்சி அஸர் தொழுகைக்குப் பிறகு துவங்கி மஃரிப் தொழுகை வரை நடைபெற்றது.